TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

நியாயவிலைக் கடைகளில் 2767 விற்பனையாளர், உதவியாளர் வேலை


தமிழ்நாட்டின் திருவள்ளுர், சேலம், ஈரோடு, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, திருநெல்வி, தூத்துக்குடி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 2767 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து டிசம்பர் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 2767

மாவட்ட வாரியான காலியிடங்கள் விவரம்:
1. கன்னியாகுமாரி - 96
2. நாகப்பட்டினம் - 97
3. திருநெல்வேலி - 118
4. தூத்துக்குடி - 63
5. கோவை - 36
6. தஞ்சாவூர் - 142
7. நாமக்கல் - 126
8. கிருஷ்ணகிரி - 48
9. திருச்சி - 203
10. சேலம் - 135
11. ஈரோடு - 166
12. ராமநாதபுரம் - 79
13. சிவகங்கை - 69
14. திண்டுக்கல் - 73
15. நீலகிரி - 75
16. தர்மபுரி - 20
17. விருதுநகர் - 45
18. திருப்பூர் - 88
19. கடலூர் - 127
20. திருவள்ளூர் - 99
21. திருவண்ணாமலை - 110
22. விழுப்புரம் - 296
23. புதுக்கோட்டை - 140
24. மதுரை - 86
25. காஞ்சிபுரம் - 145
26. திருவாரூர் - 50
27. அரியலூர் - 75

பணி: விற்பனையாளர் 
சம்பளம்: தொகுப்பு ஊதியம் ஒரு ஆண்டுக்கு ரூ.5,000 அதனைத் தொடர்ந்து ஊதிய விகிதம் ரூ.4,300 - 12,000
தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி(+2) பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். 

பணி: கட்டுநர்
சம்பளம்: தொகுப்பு ஊதியம் ஒரு ஆண்டுக்கு ரூ.4,250, அதனைத் தொடர்ந்து ஊதிய விகிதம் ரூ.3,900 - 11,000.
மேற்கண்ட பணியிடங்கள் நேரடி நியமனத்தின் போது அரசுப் பணிக்கு இனச் சுழற்சி முறை பின்பற்றப்படுகிறது.
தகுதி: பள்ளி இறுதி வகுப்பு/பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின் படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை விண்ணப்பத்துடன் வழங்கப்படும் முப்படி செலான் மூலமாக அந்தந்த மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் எந்த கிளையிலும் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு மையத்தின் சேமிப்புக் கணக்கில் செலுத்த வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், பிளாக்-IV, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகமண்டலம், நீலகிரி மாவட்டம் - 643 006

விண்ணப்பதாரர்கள் எந்த மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கிறார்களோ, அந்தந்த மாவட்ட முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்: தலைவர், கூட்டுறவுச் சங்களங்களின் மண்டல இணைப்பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 15.12.2017

No comments:

Post a Comment